தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் ; இன்றைய நிலவரம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (2024.06.28) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 711,378 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய தங்க நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,010 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 184,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,970 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.