இலங்கை வந்த நடிகர் சூர்யா; விமான ஊழியர்களுடன் செல்ஃபி!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார்.

இலங்கைக்கு திடீர் வருகை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான UL122 என்ற விமானத்தில் அவர் பயணித்தார்.
விமானத்தினுள்ளும், விமான நிலையத்திலும் அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.

நடிகர் சூர்யாவின் இந்தத் திடீர் இலங்கை வருகைக்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், படப்பிடிப்புத் தளம் ஒன்றைப் பார்வையிடவோ அல்லது தனிப்பட்ட பயணமாகவோ இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையையொட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.