விபரீதத்தில் முடிந்த டிக்டொக் நட்பு ; இலங்கையில் இப்படியும் சம்பவம்! அவதானம் மக்களே!

Colombo Sri Lanka Police Investigation TikTok Crime
By Sulokshi Jan 29, 2026 12:00 PM GMT
Report

   மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை, கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார்.

விபரீதத்தில் முடிந்த டிக்டொக் நட்பு ; இலங்கையில் இப்படியும் சம்பவம்! அவதானம் மக்களே! | Tiktok Friendship Turns Dangerous

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து

 இருவரும் கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்துள்ள உணவகத்தில் சந்தித்துள்ளதுடன், பின்னர் சந்தேகநபர் குறித்த நபருக்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை அருந்தச் செய்துளார்.

தமிழர் பகுதியொன்றில் குடும்ப பெண்ணை காப்பாற்ற முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள்

தமிழர் பகுதியொன்றில் குடும்ப பெண்ணை காப்பாற்ற முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி ; பறிபோன உயிர்கள்

அவர் நினைவிழந்த பின்னர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் அவரது வங்கிக் அட்டையிலிருந்து 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபரீதத்தில் முடிந்த டிக்டொக் நட்பு ; இலங்கையில் இப்படியும் சம்பவம்! அவதானம் மக்களே! | Tiktok Friendship Turns Dangerous

பின்னர் இது தொடர்பில் குறித்த தனியார் வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய இந்தச் சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபரணத்தை விற்ற பணத்தில்  சொகுசு வாழ்க்கை

அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து பணத்தை அறவிடும் இயந்திரம் ஒன்று, 05 போதை மாத்திரைகள் மற்றும் சில பணத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் பரபரப்பு; தலையில் அடிகாயங்களுடன் சடலம்; கொலையா?

முல்லைத்தீவில் பரபரப்பு; தலையில் அடிகாயங்களுடன் சடலம்; கொலையா?

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரி ஒருவரையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சந்தேகநபர் குறித்த இரண்டு நபர்களிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சென்னையை உலுக்கிய பயங்கரம்; கணவன், மனைவி, குழந்தை வெட்டி வீசப்பட்ட கொடூரம்

சென்னையை உலுக்கிய பயங்கரம்; கணவன், மனைவி, குழந்தை வெட்டி வீசப்பட்ட கொடூரம்

சந்தேகநபர் திருடிய சில தங்க நகைகளை நீர்கொழும்பு பிரதேசம் மற்றும் கொழும்பு செட்டித் தெருவில் உள்ள நகைக்கடைகளில் விற்றுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற பணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற நெருங்கிய நண்பர் ஒருவரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக, வத்தளை - மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு அப்பணத்தில் 10 இலட்சம் ரூபாவை வழங்கியதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தில் பெரும்பகுதியைச் செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டம்; மட்டக்களப்பு நபர் ஆபத்தான நிலையில்

கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டம்; மட்டக்களப்பு நபர் ஆபத்தான நிலையில்

சந்தேகநபர் இவ்வாறாகப் பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களைப் போதையேற்றிப் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை இதுவரை குறித்த சாமியாருக்கு வழங்கியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US