சென்னையை உலுக்கிய பயங்கரம்; கணவன், மனைவி, குழந்தை வெட்டி வீசப்பட்ட கொடூரம்
சென்னையில் வடமாநில குடும்பம் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் , பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு இந்திரா நகரை ஒட்டிய பகுதியில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்த இந்த கொடூர சம்பவம், நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வருகிறது.

சிசிடிவி கேமரா பதிவு
கடந்த திங்கட்கிழமை (26) , சென்னை இந்திரா நகர் பகுதியில் சாலையோரம் கிடந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிந்தோடியதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் ஒரு இளைஞர் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பதும், சென்னையில் வேலைக்காக குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

கௌரவ் குமாரின் மனைவி புனிதா குமாரின் செல்போன் எண்ணுக்கு போலீஸ்காரர் தொடர்பு கொண்டால் அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
எனவே, 5 தனிப்படங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் சந்தேகத்துக்கிடமான சிலர் மற்றும் தொடர்புடைய சிலர் என எல்லோரையும் பிடித்து விசாரித்த போது வடமாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் கௌரவ் குமார், புனிதா குமாரி மற்றும் அவர்கள் மூவரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
அவர்கள் புனிதா குமாரியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. அதை கௌரவ் குமார் தட்டி கேட்டபோது அவரையும் அவர் மனைவி மற்றும் பெண் குழந்தை என மூவரையும் அந்த கும்பல் கொலை செய்திருக்கிறது.
அதன்பின் புனிதா குமாரி உடலை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கிலும், குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பங்கிங் கால்வாயிலும் வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சாக்கு மூட்டையை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு, அந்த இருசக்கர வாகனத்தின் நம்பர் ப்ளேட் மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.