ஐரோப்பிய வாழ் குடும்பஸ்தரை ஏமாற்றிய யாழ் ரிக்ரொக் யுவதி; பின்னர் நடந்த சம்பவம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ரிக்ரொக் காணொளியால் காதல்
ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே யுவதியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது.
திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்துள்ளதுடன், யுவதி மீது யாழ் நீதிமன்றமொன்றில் வழக்கு பதிவு செய்துள்ளாராம்.
ஐரோப்பிய நாடொன்றில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குடும்பஸ்தர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாண ரிக்ரொக் அழகியின் வீடியோக்களில் மயங்கி, ரிக்ரொக் மூலம் யுவதியுடன் அறிமுகமாகியுள்ளார்.
குடும்பஸ்தருடன் நெருக்கம்
இதனையடுத்து இருவரும் காதலித்ததாகவும், அக் காலப்பகுதியில் யுவதிக்கு சுமார் 32 இலட்சம் ரூபா பணத்தை குடும்பஸ்தர் அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் , யுவதி தன்னை நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை மீள பெற்றுத்தர வேண்டுமென்றும் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.
அத்துடன் யுவதிக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதுடன் யுவதி தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில், யுவதியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர் கலாட்டாவிலும் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, யுவதியின் வீட்டின் அருகிலிருந்த அந்த பகுதி கிராமசேவகர் தலையிட்டு, அந்த நபரை சமரசப்படுத்தி, எதுவாக இருந்தாலும் பொலிஸ் நிலையம் சென்று முறையிடுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
யுவதியுடன் சுமார் 2 வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்த குடும்பஸ்தர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களின் பிரதிகளை வீட்டில் வீசியெறிந்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், சட்டத்தரணியொருவர் மூலம், ஐரோப்பியவாழ் குடும்பஸ்தர் கடந்த வாரம் ரிக்ரொக யுவதிக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.