தமிழர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த அனர்த்தம்
மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், மதில் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (17) மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்துள்ளதுடன் அதில் தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.