மகாளய பட்சத்தில் ஏன் திதி கொடுக்கவேண்டும்?

Astrology Hinduism
By Yadu Oct 05, 2023 04:44 AM GMT
Report

நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள், கஷ்டங்களுக்கு பித்ருக்களின் சாபமும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

இந்த சாபங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற காலம் மகாளய பட்ச காலமாகும்.

ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும் அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆகும். ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பளம்: வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள் !

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பளம்: வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள் !

மகாளய பட்சத்தில் ஏன் திதி கொடுக்கவேண்டும்? | Curse Pitrus Also Responsible For The Difficulties

மகாளய பட்சம்

மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும்.

இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.

அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள்.

ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணிக்கு மகிழ்ச்சி தகவல்!

ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணிக்கு மகிழ்ச்சி தகவல்!

அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.

மகாளய பட்சத்தில் ஏன் திதி கொடுக்கவேண்டும்? | Curse Pitrus Also Responsible For The Difficulties

மகாளய அமாவாசையின் சிறப்பு

மாதந்தோறும் வரும் அமாவாசை திதி முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும் வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவையாகும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் சிறப்பானவையாகும்.

காரணம் ஆடி அமாவாசையில் முன்னோர்கள் நம்மை காண்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் காலமாகும்.

மகாளய அமாவாசையில் பித்ருக்கள் நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யும் தர்ப்பணங்களை ஏற்று நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம்.

யாழ் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் சிறப்பான வரலாறு! சுவாரஸ்ய தகவல்

யாழ் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் சிறப்பான வரலாறு! சுவாரஸ்ய தகவல்

தை அமாவாசை என்பது பித்ருக்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்லும் காலமாகும்.

இவற்றில் மற்ற எந்த அமாவாசைக்கும் இல்லாத தனிச்சிறப்பு புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு உண்டு.

மாதந்தோறும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் இந்த புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையில் விரதம் இருந்தால் 12 மாதங்களும் விரதம் இருந்ததற்கு சமம் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.

மகாளய பட்சத்தில் ஏன் திதி கொடுக்கவேண்டும்? | Curse Pitrus Also Responsible For The Difficulties

மகாளய பட்சம் 2023 எப்போது?

இத்தகைய சிறப்பு மிக்க மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் திகதி துவங்குகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.

மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 14 ம் திகதி வருகிறது.

இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால் இந்த நாட்களில் சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது.

அதாவது பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்று விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசியுடன், பெருமாளின் ஆசியையும் பெற முடியும்.

மகாளய பட்சத்தில் ஏன் திதி கொடுக்கவேண்டும்? | Curse Pitrus Also Responsible For The Difficulties

பித்ரு தர்பணம் கொடுக்க எளிய வழிமுறை?

நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள்.

யாழில் நீதிதேவதையின் முன் மண்டியிட்ட சட்டத்தரணிகள்!

யாழில் நீதிதேவதையின் முன் மண்டியிட்ட சட்டத்தரணிகள்!

அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.

சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும் பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விடலாம்.

இந்த வருடம் மகாளய பட்சம் அக்டோபர் 14ஆம் திகதி வருகிறது. முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்.

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US