மறந்தும் கூட இந்த 5 நாட்களில் துளசி இலைகளை பறிக்கக்கூடாது ஏன் தெரியுமா?
துளசி இலைகளை குறிப்பிட்ட 5 நாட்களில் மட்டும் கண்டிப்பாக பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் துளசி இலைகளை பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்தை பெறுவதுடன், சில தீய விளைவுகளையும் பெற வேண்டி இருக்கும்.
துளசி செடியை வழிபடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது. அதே போல் துளசி இலைகளை பறிப்பதற்கும் முறைகள் உண்டு. குறிப்பிட்ட 5 நாட்களில் துளசி இலைகளை கண்டிப்பாக பணிக் கூடாது. அப்படி பறிப்பதால் துரதிஷ்டம் வந்து சேருவதுடன், மகாலட்சுமியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
எந்தெந்த நாட்களில் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதற்கு என்ன காரணம் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி இலைகளை பறிப்பது மிகவும் தவறானதாகும். சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் துளசி இலைகளை பறிப்பதால் எதிர்மறை விளைவுகளும், துரதிஷ்டமும் ஏற்படும். கெடுதல்கள் நடப்பதுடன், துன்பங்களும் வந்து சேரும் என சொல்லப்படுகிறது.
துவாதசி
துளசி இலைகளை பறிக்கக் கூடாத மற்றொரு நாள் துவாதி திதி ஆகும். இது துளசி தேவி ஓய்வு எடுக்கும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் துளசி இலைகளை பறிப்பது துளசி தேவியை தொந்தரவு செய்வது போல் ஆகி விடும். இது மகாவிஷ்ணுவின் கோபத்தை பெற்று தருவதுடன், துரதிஷ்டத்தை தரும். துவாதசியில் துளசியை வழிபடுவது தான் நல்லது. அன்றைய தினம் துளசி தேவி ஓய்வு எடுப்பதால், அவரது ஆற்றல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அமாவாசை
அமாவாசை மிக மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் துளசி இலைகளை பறிப்பதால் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். இதனால் வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை பாதிக்கப்படும். இவற்றை தவிர்ப்பதற்கு அமாவாசை தினங்களில் துளசி இலைகளை பறிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அமாவாசை நாட்களில் வீட்டில் நன்மைகள் பெருகுவதற்காக ஆன்மிக காரியங்கள், வழிபாடுகள் ஆகியவற்றை செய்வது நல்லது.
சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் ஏற்படும் நாட்களில் துளசி இலைகளின் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும். அந்த சமயத்தில் அவற்றை பறிப்பதால் தீய விளைவுகள், பாதிப்புகள் ஏற்படும். சந்திர கிரகணம் என்பது மனம், உணர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய நாளாகும். இந்த நாளில் துளசி இலைகளை பறித்தால் மனம், உணர்வுகள் ஆகியவற்றின் சமநிலை பாதிக்கப்படும். துரதிஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க இந்த நாளில் துளசி இலைகளை பறிப்பதை தவிர்ப்பது நல்லது.
செவ்வாய்கிழமை
செவ்வாய்கிழமை என்பது மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இது மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் நாளாகும். இந்த நாளில் துளசி இலைகளை பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், துரதிஷ்டம் ஆகியவை ஏற்படும். மாறாக செவ்வாய் கிழமைகளில் துளசி செடிக்க தண்ணீர் விட்டு, துளசி மாடத்திற்கு முன் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட வேண்டும். இது மகாலட்சியின் மனதை மகிழ்வித்து, லட்சுமியின் ஆசிகளை பெற்றுத் தரும்.