கொரோனா காலத்திலும் ஆதரவற்றவர்களின் பசியைப்போக்கும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான்
கொரோனாவாலும் பயணக்கட்டுப்பாடுகளிலும் மக்கள் பெரிதும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். குடும்பத்தில் உழைப்பவர்கள் உள்ளவர்களுக்கே இந்த நிலை எனில், ஆதரவற்றவர்களில் நிலையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
இந்த நிலையில் அன்னதான கந்தன் என சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தின் பணி இடர் காலத்திலும் தொடர்கிறது.
அன்னதானக் கந்தனின் ஆலயத்தை சூழவுள்ள பிரதேசங்களில் இருக்கின்ற முதியவர்களுக்கான மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தினமும் அவர்களுக்கு ஒவ்வொரு வேளையும் ஒவ்வொருவிதமான உணவுகள் வழங்கப்படுவது சன்னிதியான் ஆசிரமத்தின் சிறப்பு ஆகும்.
இந்த நிலையில் ஆதரவற்றவர்களின் பசியை போக்கும் ஆச்சிரம மோகனதாஸ் ஸ்வாமி மற்றும் அவரது குழுவினருக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றது.