தனக்கான குழியைத் தானே தோண்டும் அரசாங்கம்; நாமல் காழ்ப்புணர்ச்சி
ஆட்சியில் தற்போதுள்ள அரசாங்கம் தனக்கான குழியைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சீனிகம பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

மக்கள் மீது தாங்க முடியாத வரிச் சுமை
தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், அக்காலப்பகுதி மக்களுக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்கள் மீது தாங்க முடியாத வரிச் சுமைகளைச் சுமத்தியுள்ளதால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது.
பல குடும்பங்கள் புத்தாண்டு காலத்தில் தற்காலிக முகாம்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்களின் எதிர்காலம் மற்றும் வீடுகள் குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். .