யாழில் STFஆல் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட முச்சக்கர வண்டி ; 19 வயது இளைஞன் செய்த செயல் அம்பலம்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் 2 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்குப் பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விசேட அதிரடிப்படையால் திடீர் சுற்றிவளைத்து மறிக்கப்பட்டது.

சோதனை
முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 2 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஓட்டோச் சாரதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவர் பிடிபட்ட கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.