50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி ; அதீத வேகத்தால் வந்த வினை
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை
பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனினும், முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
அதிக வேகம் காரணமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.