எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, தம்புள்ளையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறியுடன் மோதியதாக திம்புள்ள–பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நிலவிய கடும் பனியுடனான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், முச்சக்கரவண்டிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.