இளம் பெண்ணுடன் தகாத உறவு ; ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த முச்சக்கர வண்டி சாரதி ; தப்பியோடிய காதலி
ஒரு பெண்ணுடன் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த முச்சக்கர வண்டி சாரதி, அதே அறையிலேயே திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பத்தின் போது அவருடன் வந்த பெண் ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் இடையில் தவறானதொடர்பு இருந்ததாகக் சப்புகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவர்கள் இருவரும் சேர்ந்து ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து உள்ளே சென்றுள்ளனர், அங்கு அவர் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் அறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடன் வந்தவர் மயக்கமடைந்த நிலையில் படுக்கையில் இருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளார்.
நிலைமையை உணர்ந்த அந்த ஊழியர் உடனடியாக செயல்பட்டு 1990 ஆம்புலன்ஸ் சேவைக்கு உடனடியாக அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் இருந்த நபரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பிறகு, ஹோட்டல் ஊழியர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைக் கேட்டு அறிந்து, அவர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.