சவூதி அரேபியாவிற்கு உம்ரா பயணம் செல்வோருக்கு அவசர எச்சரிக்கை
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, சவூதி அரேபியாவிற்கு உம்ரா பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கைப் பிரஜைகள் பயண ஏற்பாடுகளைச் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஜெட்டாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தீவுகள் ஆராயுங்கள் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவித்தலின்படி, சவூதி அரேபியாவிற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உம்ரா பயணத்தை மேற்கொள்ளவுள்ளவர்கள், தங்களது சம்பந்தப்பட்ட உம்ரா குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியான நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளைக் கையாளும் வகையில், பயணத் திட்டங்களில் முறையான மாற்று ஏற்பாடுகளும் உள்ளதைப் பயணிகள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.