ரயிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து; ஸ்தலத்தில் சாரதி பலி
கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடம் மோதி சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து இன்று (31) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடபில் மேலும் தெரியவருகையில்,

கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        