கட்டுப்பாட்டை இழந்த லொறி ; வாகனங்கள் சேதம் ; இருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றின் மீது லொறி மோதியதன் பின்னர் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தினால் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி பயணித்த லொறி பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து ஏற்பட்டுயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் மின்சார உபகரண விற்பனை நிலையம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.