எடையை குறைக்க தினமும் கொஞ்சம் வெந்தயம் போதும் ; நீங்கள் நினைப்பதைவிட அதிக மாற்றங்கள் நிகழும்
ஆரோக்கியமான எடை இழப்புக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் தேவைப்படுகிறது. நமது எடை இழப்பில் நமக்கு உதவக்கூடிய மிக எளிய சமையலறை பொருட்கள் பல உள்ளன. அத்தகைய ஒரு ஆயுர்வேத எடை இழப்பு பொருள்தான் வெந்தயம்.
நீரிழிவு நோயாளிகள் எடையை குறைக்க விரும்பினால் இது அவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. இந்த வெந்தயத்தில் எடையை குறைக்க உதவும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளன. அவை நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெளியிட உதவுகிறது. மேலும் நமது வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயம் நமக்கு உதவலாம்.

உடல் எடைக் குறைப்பில் வெந்தயம் எவ்வாறு உதவுகிறது?
நன்மைகள்: வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் பசியை அடக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெந்தயம் எடுத்துக் கொள்ளப்படும் போது அது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. நமது உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்த இந்த வெந்தய விதைகள் பயன்படுகின்றன.
வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வது உடலில் வெப்பத்தை உருவாக்கி எடையை குறைக்க உதவுகிறது. எடையை குறைத்து சிறந்த தீர்வுகளை பெற, தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெந்தய தேநீர் அருந்தலாம். இந்த வெந்தயத்தை உட்கொள்ள மூன்று வெவ்வேறு வழிகள் உள்ளன.
வெந்தயத் தண்ணீர்: வெந்தயத் தண்ணீர் இரண்டு கப் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் இதில் 10 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் குடிக்கலாம். ஊறிய வெந்தயத்தை மென்று விழுங்கவும்.

வெந்தய தேநீர் : வெந்தய தேநீர் முதலில் மிக்ஸியில் போட்டு வெந்தயத்தை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, பொடி செய்யப்பட்ட இந்த வெந்தயத்தை அதனுடன் சேர்க்கவும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு பின் இறக்கவும். குறைந்தபட்சம் அதிக சூட்டில் இதை அருந்த முயற்சிக்கவும்.
முளைகட்டிய வெந்தயம்: முளைகட்டிய வெந்தயம் வெந்தயத்தை முளை கட்ட வைத்து உண்பது ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இந்த முறையில் வெந்தயத்தில் உள்ள அனைத்து நார்ச்சத்துக்களையும், தாதுக்களையும் நம்மால் பெற முடியும். மெலிதான சுத்தமான ஒரு துணியை எடுத்துக் கொள்ளவும்.
இந்த துணியை தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு வெந்தயம் எடுத்து இந்த ஈரமான துணியில் வைத்து மூடி வைக்கவும். மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த வெந்தய விதைகள் முளைக்கத் தொடங்கி இருக்கும். ஒரு நாள் அந்த வெந்தயத்தை உலர வைத்துவிட்டு, அடுத்த நாளிலிருந்து இதை உட்கொள்ளலாம்.
