மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; தாயும் மகனும் பரிதாப பலி
அனுராதபுரம் - பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இன்று காலை ( 21) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் ,மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகனும் பலி
விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டியின் சாரதியும், வாகனத்தில் பயணித்த பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 58 வயதுடைய தாயும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் கல்கமுவ அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.