இலங்கை மீனவர்கள் மூவர் தமிழகத்தில் தஞ்சம்!
Jaffna
Sri Lanka
India
By Kirushanthi
யாழ்ப்பாணம் - ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மூவர் இந்தியா சென்றுள்ளனர்.
குறித்த மூன்று மீனவர்கள் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
இம்மூவரும் யாழ்ப்பாணம் - எழுகைதீவில் இருந்து கடந்த(06.08.2023) ஆம் திகதி காலை 9 மணியளவில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் சென்ற படகு மதியம் 2 மணியளவில் இஞ்சின் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US