தொடர் பாலியல் வன்கொடுமை செய்த மருமகன் ; மாமியார் செய்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி
தெலுங்கானாவில், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகனை, கட்டையால் அடித்துக் கொலை செய்த மாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான குறித்த நபர், மது போதையில் வீட்டுக்கு வந்து, உறக்கத்திலிருந்து 60 வயது மாமியாரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
மாமியார் கைது
இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த குறித்த நபர், மாமியாரிடம் மீண்டும் அத்துமீற முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த மாமியார், அருகிலிருந்த கட்டையை எடுத்து, மருமகனான குறித்த நபரைத் தாக்கினார்.
இதில், தலையில் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பொலிஸார் மாமியாரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.