அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடத் தயாராகும் தடையில் உள்ள மூன்று இலங்கை வீரர்கள்!
கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டிற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிகல மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டிலிருந்து அதிருப்தியடைந்த சில வீரர்கள் ஏற்கனவே வெளியேறி, அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். தற்போது தடைவிதிக்கபட்ட 3 வீரர்களும், அங்கிருக்கும் முன்னாள் வீரர்களால் ஒருங்கிணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ. 30 மில்லியன் அபராதமும் இதுவரை செலுத்தப்படவில்லை. அவர்கள் அபராதத்தை செலுத்தா விட்டால், அவர்களிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையிலிருந்து அதை கழிக்க, இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.