சஜித் அணியில் இருந்து மூவர் விலகல்
மாத்தளை மாவட்டத்தில் சஜித் அணியில் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதனை , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்தார்.