சிறைக்குள் அடிதடி ; STF அதிகாரிகள், பாதாள உலக குற்றவாளி காயம்
பூஸா சிறைச்சாலையில் ஏற்பட்ட தகராறில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “புரு முனா”என அழைக்கப்படும் ரவிந்து சங்க த சில்வா ஹேவத் என்பவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “புரு முனா” என்பவருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதிரடிப்படை அதிகாரிகள் காயம்
“புரு முனா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை காணொளி அழைப்பு ஊடாக மேற்கொள்வதற்கு ஆயத்தம் செய்துக்கொண்டிருக்கும் போதே இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது “புரு முனா”மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.