பொலிஸாரின் அதிரடியால் பிடிபட்ட பெண் உள்ளிட்ட மூவர் ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏகல பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோத மதுபானம்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏகல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது
அதன்படி, படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 56.25 லீற்றர் (75 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொட பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 56.25 லீற்றர் (75 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் யாகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.