யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கொடூரம்
யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து வன்முறை கும்பல் ஒன்றுடன் வாகனத்தில் வந்த நபரே தனது தந்தை, சகோதரன் மற்றும் சகோதரனின் மகன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வவுனியாவில் இருந்து வன்முறை கும்பலுடன் யாழ்ப்பாணத்திற்கு கூரிய ஆயுதங்கள் வாள்களுடன் வந்து தாக்குதல் மேற்கொண்டு விட்டு மீள தப்பி சென்றுள்ளமை அப்பிரதேச மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.