மருதானை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்
Sri Lanka Police
Colombo
Crime
Drugs
By Sulokshi
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்பை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்தே, 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US