பெத்தும் நிஸ்ஸங்கவின் அதிரடியால் அவுஸ்திரேலியா அணியை பந்தாடி Super 8 சுற்றுக்கு தெரிவானது இலங்கை அணி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அதேபோல், குசல் மெந்திஸ் 50 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.