யாழில் 24 மணி நேரத்தில் மூவர் கொரோனாவுக்கு பலி!
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் , சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் இவ்வாறு உயிரிழந்தனர்.
மேலும் உயிரிழந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர், அனுமதி பகுதியில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இதுவரை யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.