தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி சம்பவம் ; 34 வாரங்களிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த இன்சாத் பானு கல்முனை அமைந்துள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

மூன்று ஆண் குழந்தைகள்
பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளதுடன், தாயின் உடல் நலவும் சிறந்த முறையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர்கள், திட்டமிடல் வைத்திய அதிகாரி, தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி, வைத்தியர்கள்,தாதிய மேற்பார்வையாளர் , தாதியர்கள், மருத்துவ தாது மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.