பார்க்கிங் பணம் வசூலித்த மூவர் கைது
ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூவரை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள், ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.
உனவடுன சுற்றுலாப் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபாவும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களை நிறுத்துவதற்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 35 மற்றும் 41 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதான சந்தேகநபர்கள் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (11) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.