கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றுவதற்கு இடம் பெறும் பெரும் சதி அம்பலம்

Batticaloa Education
By Shankar Apr 23, 2024 12:42 AM GMT
Report

கிழக்கு மாகாண ஆளுநர் திறம்பட சேவையாற்றுவதுடன் அந்த மாகாணத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கள விஜயம் சென்று செவ்வனே சேவையாற்றி வருகிறார்.

இதேவேளை ஊழல், மோசடி போன்ற பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கையும் எடுத்து வருகின்றார்.

இப்போது அவர் நடவடிக்கை எடுத்த கல்வி அதிகாரி ஒருவர் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கான நடவடிக்கைகளை இன்று தயார்படுத்தியுள்ளார்.

அவை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பட்டிருப்புக் கல்வி வலயத்தில் அதிகாரத் தில்லுமுல்லுகள் பழிவாங்கல்கள் மோசடிகள் செய்து வந்த பணிப்பாளர் சிறி, மாகாணக் கல்விச் செயலாளர் மூலமாக கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சிறியின் 4 அடிவால்கள் 

இடமாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு 4 அதிபர்களை பணிப்பாளர் சிறி பயன்படுத்தி வருகின்றார்.

பழுகாமம் கண்டு மணி அதிபர், பழுகாமம் விபுலானந்தா அதிபர், பெரிய கல்லாறு விநாயகர் அதிபர், மகிழூர் வித்தியாலய அதிபர்  ஆகியோர் பணிப்பாளரின் சலுகைக்கு உரியவர்கள் ஆவர்.

இவர்களின் வீடுகளுக்கு பணிப்பாளர் மாலை வேளைகளில் சென்று திட்டங்களைத் தீட்டி வருகின்றார்.

கூலிக்கான கூட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அவுஸ்ரேலியாவில் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்கள் பணிப்பாளர்களின் டம்மிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிதியானது ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்கள் என்று வீசப்படுகின்றன.

பழுகாமன் திலக்ஸ்

பழுகாமத்தில் தில..சன் என்பவரும் பணத்திற்காக விழுந்தடித்து ஆட்களைத் திரட்டி பணிப்பாளருக்குப் பக்கபலமாக உள்ளார். பணிப்பாளரால் பதவிகள் சலுகைகள் பெற்ற நான்கு அதிபர்கள் பம்பரமாய்ச் சுழல்கின்றார்கள்.

ஒரு நாள் ஆட்டம்

ஏப்பிரல் 23 ஆந் திகதி மட்டக்களப்பு நகர் காந்தி சதுக்கத்தில் ஒரு நாள் கூலி அடிப்படையில் சேர்க்கப்பட்ட கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் ஒன்று ஆர்ப்பாட்டம் செய்யத் திரட்டப்படுகின்றது.

வலயக் கல்விக் கந்தோர் பட்டிருப்பில் இருக்கும் நிலையில் மட்டக்களப்பில் ஏன் ஆர்ப்பாட்டம்? அங்கு தான் விடயம் இருக்கிறது.

மட்டக்களப்பு மேற்கில் பணிப்பாளராக இருந்தவர் அங்கும் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் அதிகாரிகள் என்று சிறு குழுவொன்றை வைத்துள்ளது.

அதாவது சிறியின் தனிப்பட்ட தேவைக்காக தவறாகச் சலுகைகள் கொடுத்து வளர்க்கப்பட்ட குழுவே இதுவாகும்.

அவர்களைக் காந்தி சதுக்கத்தில் கொண்டு வருவது இலகுவானது என்று நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் பணிப்பாளருக்கு ஆலோசனை கூறியள்ளார்கள்.

இதற்கான பணம் இவர்களிடம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பட்டிருப்பில் இருந்து மேலே குறிப்பிட்ட 4 அதிபர்கள் மற்றும் திலக்சன் (தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகச் செயலர்) போன்றவர்கள் பெற்ற சலுகைக்காகவும் கூலிக்காகவும் செயற்பட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்போது எழுகின்ற கேள்வி என்னவென்றால், இந்தப் போராட்டத்தில் வெல்லப்போகின்றவர் யார்? மூக்குடையப் போவது யாருக்கு? ஆளுனரா? பணிப்பாளரா? பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுனரின் நியாய அதிரடியா? பணிப்பாளரின் கூலிப் பதிலடியா? வெல்கின்றது எனப் பார்ப்போம்.

கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றுவதற்கு இடம் பெறும் பெரும் சதி அம்பலம் | Threatening The Governor With A Demonstration

மோசடி நியமனம் 

குறுக்குவழி மோசடி வழிகளில் பணிப்பாளர் சில வெற்றிகளை அடைந்து விட்டார். இருந்தாலும் பல தடவைகள் இவர் மூக்குடைந்தும் துரத்தப்பட்டுள்ளார்.

மோசடியால் நியமனம், காசடிக்கும் நிருவாகம், கூலி கொடுத்து கூட்டம் சேர்க்கும் பணிப்பாளர் எத்தனை நாள்தான் ஏமாற்றுவார் என்று பார்ப்போம். மீண்டும் வருவேன், PDE ஆவேன் என்ற கோசம் நடக்குமா? இவரது வேசம் வெளிக்குமா? எல்லாம் ஆளுனரின் கையிலே உள்ளது.

மொட்டுப் பணிப்பாளர் சிறி எப்படி தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சகாவான தில...சனை வாங்கினார் என்பதும் கேள்வியாக உள்ளது.

முன்னாள் ஆளுனர் அநுராதாவின் ஆளான பணிப்பாளர் முன்னாள் ஆளுனர் மூலமாக, சிங்கள SLEAS அதிகாரிகளையும் ஆர்ப்பாட்த்தில் திரட்டுவதற்கு செய்திகளைப் பரிமாறி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் பணிப்பாளர் சிறியால் தனக்கு ஆதரவாகவும், ஆளுநர் செந்தில் அவர்களுக்கு எதிராகவும் தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் களுதாவளை, பழுகாமம், மகிழூர், கல்லாறு, கன்னன்குடா, காயான்மடு ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

திருக்கோவிலில் சிறியின் சகாவான பணிப்பாளர் மூலமாக சிறியின் பிரசுரம் கல்விச் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது. சிறியின் ஆட்டம் விசப்பரீட்சையாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.

பிக்குகள், அதாவுல்லா உதவிகளை நாடிய பணிப்பாளர் 

ஆளுநரை எதிர்ப்பதற்காக திருகோணமலைப் பிக்குகள் இருவர் சகிதமாக,அதாவுல்லாவை சந்தித்த பணிப்பாளர்.

ஆளுனர் செந்தில் அவர்களை அகற்றி, அதாவுல்லாவை ஆளுனராக்க வேண்டும் என்று பிக்குகளிடம் கேட்டதாகவும் அறிய முடிகின்றது. ஆளுனரையே மாற்ற சிறி பிக்குகளின் காலைப் பிடித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US