இலங்கையி்ல ஆயிரக்கணக்கானோரை கைது செய்த பொலிஸார்
சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 3,017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3,018 சோதனைகள் நடவடிக்கைகள் ஊடாக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறப்பு நடவடிக்கைகள்
ஹெரோயின் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதற்கு அமைய, 1,014 சோதனைகளில் 1,014 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், ஐஸ் தொடர்பான 1,031 சோதனை நடவடிக்கைகளில் 1,030 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது, 1 கிலோ 618 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும், 2 கிலோ 156 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விசேட சோதனைகளின் போது 8,260 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதன், அவை தொடர்பாக 48 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.