முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த திருமாவளனுக்கு அருகதை இல்லை!
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய அரசியல்வாதி தொல். திருமாவளன், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு தொல். திருமாவளன், சென்றமை தொடர்பில் சமூகவலைத்தளவாசிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

நினைவிடத்தில் கால் வைப்பதற்கு அருகதை இல்லை
இலங்கையில் உள்ளநாட்டு போரில் லட்சகணக்கில எமது மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்த நேரத்தில் மஹிந்தவுடன் கைகுலுக்கிய திருமாவளனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் கால் வைப்பதற்கு கூட அருகதை இல்லை என சினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமா , கலைஞர் மகள் கனிமொழி உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து, மஹிந்தவுடன் பால் சோறு புசிக்க வந்த கயவர்கள் எவ்வாறு எம்மக்களுக்கு அஞ்சலி செலுத்த வரலாம் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில அஞ்சலி செலுத்துவதற்கு இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது எனவும் கடும் சினம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழினத்துரோகி , சைவத்தின் விரோதி ,சைவசமயத்தை வேரறுக்க வேண்டும் ஆலயத்தை ஆபாசக்கூடம் என்று சித்தரித்தவனுக்கு திருமூலர் வர்ணித்த ஈழ தேச பூமியான சிவபூமியில் இவருக்கு இங்கு என்ன வேலை என்றும் சமூக வலைத்தள் வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஈழத்தமிழின போராட்டத்தையே நிர்மூலமாக்க செயற்பட்டவரும் வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். கார்த்திகை வாசம் என மரநடுகை வேறயாம் எதிரியை கூட மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாது எனவும் கண்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது .
அதுமட்டுமல்லாது ஈழமக்கள் புனிதமாக, கருதும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் திருமாவளனுடன் சென்றவர் பாதணி அணிந்துள்ளமை தொடர்பிலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.