கண்டி பேருந்தில் தங்கச் சங்கிலி அறுத்த திருடி; மாட்டியவுடன் ஆடிய நாடகம்!
கண்டி நகர்ப் பகுதியில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பலவந்தமாக இழுத்து அறுத்துக்கொண்டு, ஓடும் பேருந்திலிருந்து குதித்துத் தப்பியோட முயன்ற பெண் திருடி ஒருவரைப் பொதுமக்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைநாட்டுப் பகுதியைச் சேர்ந்த பெண், நகையைத் திருடிவிட்டுத் தப்பிப்பதற்காகத் தன்னை ஒரு 'சிங்களப் பெண்' எனக் கூறி நாடகமாடியுள்ளார்.

தப்பிப்பதற்காகத் சிங்களப் பெண் ...
பொதுமகள் மடக்கிபிடித்தபோது அந்த பெண் தான் திருடவில்லை என மழுப்பலாக மறுக்க முற்பட்டுள்ளார்.இதனால் சினமடைந்த பொதுமக்கள், “அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நகையை இழுத்துப் பறித்துக் கொண்டு ஓடினாய் என ஆவேசமாகக் கூச்சலிட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.