கண் திருஷ்டி நீங்க இந்த இரண்டு பொருள் இருந்தாலே போதும்
அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் சிலர் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எதிர் வீட்டில் இருப்பவர்கள் என்று நம் வீட்டை நோட்டம் பார்ப்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள்.
கெட்ட எண்ணம் கொண்டவர்கள் நம் வீட்டிற்குள் வந்து சென்றால் சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் கூட சண்டை வந்து விடும்.
பரிகாரத்திற்கு தேவையான பொருள்
இரண்டு சின்ன வெங்காயம், வரமிளகாய். சின்ன வெங்காயத்திற்கு கண் திருஷ்டியை, கெட்ட சக்தியை ஒழித்துக் கட்டக்கூடிய சக்தி அதிகம் இருக்கிறது.
ஒருவர் மிகவும் சோர்வாக இருக்கிறார் 12 மணி உச்சி நேரத்தில் வெளியில் சென்று வந்தவன் உடனடியாக காய்ச்சலில் படுத்து விட்டான். எதையோ பார்த்து பயந்து இருக்கிறான் போல என்று கூறுவார்கள்.
அந்த சூழ்நிலையில் 7 சின்ன வெங்காயத்தை கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட நபரின் தலையை 3 முறை சுற்றி உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏற இறங்க மூன்று முறை அந்த வெங்காயத்தை ஏற்றி இறக்கி வெங்காயத்தைக் கொண்டு போய் கால் படாத இடத்தில் வீட்டை விட்டு தூரமாக போட்டு விட்டால் அந்த குறிப்பிட்ட நபரை பிடித்த கெட்ட சக்தி விலகும் என்று கூறப்படுகிறது.
கண் திருஷ்டி நீங்க நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்
ஒரு ஊசி நூல் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஊசி நூலில் முதலில் ஒரு சின்ன வெங்காயம் அடுத்து ஒரு வர மிளகாய் இப்படியாக கோர்க்க வேண்டும்.
ஒரு சின்ன வெங்காயம், ஒரு வரமிளகாய் என்று மாற்றி மாற்றி இப்படி ஏழு சின்ன வெங்காயம் ஏழு வளமிளகாய்களை, கோர்த்து இதை நிலை வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி நுழையாது. பொறாமை குணத்தோடு வீட்டிற்குள் வருபவர்களுடைய கண் பார்வையையும் இந்த இரண்டு பொருட்கள் பொசுக்கி விடும்.
கட்ட வேண்டிய நாட்கள்
இந்த பொருட்களை ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நிலை வாசலில் கட்டலாம். அப்படி இல்லை என்றால் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கட்டலாம்.
அதுவும் இல்லை என்றால் அமாவாசை மாலை 6:00 மணிக்கு மேல் இந்த இரண்டு பொருட்களை கோர்த்து நிலை வாசலில் கட்டி விடுங்கள்.
மாதத்திற்கு ஒரு முறை இந்த பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் தூர தூக்கி போட்டு விட வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இதை பார்த்தாலே கெட்ட எண்ணத்தோடு வீட்டிற்குள் வருபவர்கள் வராமல் கூட இருந்து விடுவார்கள்.