மஹிந்த காற்றில் நாமல் வாசம்; புது அவதாரம் எடுக்கும் மஹிந்த ராஜபக்ச
மஹிந்த காற்றில் நாமல் வாசம் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மொட்டுக்கட்சி தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
அக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய அரசியல் முயற்சி
கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் வசித்து வருகின்றார்.
அங்கு அவர் கட்சி ஆதரவாளர்களுடன் மீண்டும் அரசியல் செயற்பாடுகளையும் கூட்டங்களையும் ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியை இழந்த பின்னர் “மஹிந்த சுலங்க” இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதைப் போலவே, இந்தப் புதிய அரசியல் முயற்சியும் விரைவில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என SLPP மூத்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்