ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டுமாம்
முன்னோர்களின் அருளும், குல தெய்வத்தின் அருளும் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளும், மற்ற தெய்வங்களை வழிபடுவதற்கான பலனும் நமக்கு கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம்.
வீட்டில் சுப காரிய தடை, நிம்மதியின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும்.
முன்னோர்களின் அருளை பெறுவதற்கு அமாவாசை திதியில் விரதம் இருந்து பித்ரு கடன் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
கூடுதல் பலன் தரும்
மற்ற அமாவாசைகளில் கொடுக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தை விட ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற மிக முக்கியமான நாட்களில் கொடுக்கப்படும் பித்ரு தர்ப்பணத்திற்கு கூடுதல் பலன் உண்டு.
இந்த நாட்களில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தை முன்னோர்கள் நேரடியாக ஏற்று நமக்கு அவர்களின் ஆசிகளை வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதுடன் தானம் வழங்குவது அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்க வல்லதாகும்.
அமாவாசை திதி
முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த திதி அமாவாசை திதியாகும்.
இந்த நாளில் செய்யப்படும் தானம் சகல விதமான பாவங்கள், தோஷங்கள், கஷ்டங்களை நீக்கக் கூடியது என்பார்கள்.
அதிலும் ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் செய்யப்படும் தானம் மிக உயர்வான பலன்களை நமக்கு தரும்.
அன்னதானம்
பித்ருக்களுக்கு திதி கொடுத்த பிறகு ஏழைகளுக்கு, பசியால் அவதிப்படுபவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
தானியங்களை தானம் செய்வதால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் அருள் கிடைக்கும்.
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
உப்பு
ஆடி அமாவாசை நாளில் உப்பை தானம் கொடுப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும்.
உப்பு மற்றும் உப்பு கலந்த உணவுகளை தானமாக கொடுப்பதால் இந்த பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.
பசு தானம்
தானங்களில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவது கோ தானம் எனப்படும் பசு தானம்.
பசுவை தானமாக கொடுப்பதால் பித்ரு சாபங்கள் இருந்தால் நீங்கி விடும்.
அதே போன்று நாம், நம்முடைய குடும்பத்தார்கள் மட்டுமல்ல ஈரேழு பிறவிகளில் நம்முடைய ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கலும் நீங்கும்.
வஸ்திர தானம்
ஆடி அமாவாசை நாளில் பயன்படுத்திய ஆடையோ அல்லது புதிய ஆடைகளையோ வசதி இல்லாத ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
இதனால் ஆயுள்விருத்தி ஆகும், வேலையில் ஏற்படும் தடைகள் விலகும், குழந்தைகள் சிறு வயதில் இறந்து போவது போன்றவை தடுக்கப்படும்.
வஸ்திர தானம் எனப்படும் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.
நெய் தானம்
சாஸ்திர முறைப்படி நெய் மிக புனிதமான பொருளாகும். இதை தானமாக கொடுப்பதால் நோய்கள் விலகும்.
வெண்கலக் கின்னத்தில் சுத்தமான நெய்யை தானமாக கொடுக்க வேண்டும்.
இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம், நோயற்ற வாழ்வு ஆகியவை கிடைக்கும்.