ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் கொலை சம்பவம் ; துப்பாக்கிதாரி கைது
கொழும்பு ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி மீகொட ஆட்டிகல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட காவல்துறை பிரிவு கைதுசெய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் டுபாயில் உள்ள பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ஒருவரின் பணிப்புரையின் கீழ் இந்த குற்றச்சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த குற்றச்சம்பவம் மாத்திரம் இல்லாமல், ஹோமாகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.