குழந்தைகளின் வளர்ச்சியை இந்த உணவுகள் மிகவும் பாதிக்குமாம்
பெற்றோர்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, உணவு மற்றும் பானத்தின் விஷயத்தில் செய்யும் சில தவறுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குழந்தைகளுக்கு எந்த வகையான உணவைக் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்கள் பல வகையான நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை விரும்புகிறார்கள்.
குளிர் பானங்கள்
குழந்தைகள் குளிர் பானங்களைப் பார்த்தவுடன் அதனை வாங்கிக் கொடுங்கள் என மிகவும் அடம் பிடிப்பார்கள்.
இதில் மிக அதிக அளவு சர்க்கரை இருப்பதால், உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, பல் சொத்தை மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதில் உள்ள சோடா மூளை வலர்ச்சியையும் எலும்பு வளர்ச்சியையும் மிகவும் பாதிக்கும்.
துரித உணவு
குழந்தைகளுக்கு துரித உணவைக் கொடுப்பதை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லை என்றால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
அதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால் அவற்றை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.
[B4PIH
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள்
சிப்ஸ், பிஸ்கட் மற்றும் பல வகையான தின்பண்டங்களின் சுவை குழந்தைகளை மிகவும் கவர்கிறது.
ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் தீங்கான கொழுப்பு, சோடியம் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகம் இருப்பதால் இவற்றை குழந்தைகளுக்கு எட்டாதவாறு தள்ளி வைக்கவும்.
அவர்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.
வெள்ளை பிரெட்
குழந்தைகள் தினமும் காலை உணவாக மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரெட் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் சாண்ட்விச் விரும்புகிறார்கள்.
நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உப்பு சேர்க்கப்படுகிறது என்றாலும் அதிக சோடியம் உணவுகள் குழந்தைகளுக்கு நல்லதல்ல.
அதற்கு பதிலாக முழு தானிய ரொட்டியை சாப்பிட கொடுங்கள்.
மைதாவில் சத்துக்கள் எதுவுமே இல்லை. அதில் உள்ளது கார்போஹைட்ரேட் மட்டுமே.
சாக்லேட்
சாக்லேட் அல்லது இனிப்பு மிட்டாய் குழந்தைகளின் பலவீனம், ஆனால் பெற்றோர்கள் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இது குழந்தைகளில் உடல் பருமனை அதிகரிக்கிறது மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் இது பல் சிதைவுக்கும் காரணமாகும்.