எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது; லிட்ரோ நிறுவனம்
நாட்டின் பல இடங்களில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம்
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், தம்மிடம் போதுமானளவு இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகத் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தாங்கள் ஏற்கனவே 284,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் வரும் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.