நாடளாவிய ரீதியில் திடீர் எரிவாயு தட்டுப்பாடு ; அதிகாரிகள் அவசர நடவடிக்கை
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் இந்த எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி, தனிபொல்கஹ பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய நிலையில், அங்கிருந்த எரிவாயு விற்பனை முகவர் நிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலையீட்டுடன் குறித்த நிலையம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எவ்வாறாயினும், விற்பனைக்கு தேவையான போதுமான அளவு எரிவாயு கையிருப்புகள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.