சுயமாக வர்த்தக நிலையங்களை மூடியது தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை சுயமாகவே முடக்கிவருகின்றனர்.
இந்நிலையில் வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும்.
சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக தங்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்லும் மக்கள் குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும். கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலில் அடிப்படையில் பொது மக்கள் செயற்பட வேண்டும். வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும்.
எனினும் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைக்காக வெளியில் செல்லும் போது ஒருவர் என்ற அறிவுறுத்தல் தாக்கம் செலுத்தாது என்றார்.