அன்று இந்திய ஏஜென்டாக ...இன்று சீன ஏஜென்டாக அதாவுல்லா
எல். எம். அதாவுல்லா சீனாவின் ஏஜென்டாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்,
சகோ.அதாவுல்லா அமைச்சு பதவியைஎதிர்பார்ப்பதும் அது கிடைக்காது விட்டால் அந்நிய சக்திகளின் ஏஜென்ட்டாக மாறி ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதும் - வரலாற்றிற்கு ஒன்றும் புதிதான விடயமல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர அவை முஸ்லிம் சமூக நலன்களுக்கான கிளர்ச்சிகளல்ல . இதற்கு முன்னர் 2001 - 2004 ஆண்டுகளில் இருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் (ரணில்) ஆட்சிக்காலத்தில் - தனக்கும் ஒரு அமைச்சரவை அந்தஷ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தார்.
ஆனால், கிடைத்ததோ அமைச்சரவை அந்தஷ்தற்ற வீதி அபிவிருத்தி அமைச்சர் பதவிதான். அதனால், அன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த புலிகள் - அரசு சமாதான ஒப்பந்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் குழப்ப வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த இந்தியாவின் ஏஜென்டாக செயற்படத்தொடங்கினார்.
இந்திய நலன்களுக்காக வடக்கு - கிழக்கை பிரித்தல் என்ற கோஷத்தோடு கிளர்ச்சி செய்யத் தொடங்கினார். அதற்காக பரிமாறப்பட்ட பெட்டிகள் கட்டிலின் கீழே இருந்து காலையாவதற்கு முன்னர் கவனமாக அகற்றப்பட்ட கதைகளை விபரமாக கூற இப்போது மஹ்றூப் காக்கா (றபீக் மாஸ்டரின் சகோதரர்) உயிரோடு இல்லை. அதே வழியில்தான்,
இன்று அமைச்சர் பதவி வழங்கப்படாத கடுப்பை வெளிப்படுத்த சீனாவின் #ஏஜன்டாக உருவெடுத்திருக்கிறார். இந்தியாவிற்கு கொழும்பு துறைமுக மேற்கு இறங்கு மையம் கையளிக்கப்பட்டதற்காக போராடாத அதாவுல்லா சீனாவிற்கு கொழும்பு துறைமுக நகரம் தாரை வார்க்கப்பட்ட போது போராடாத அதாவுல்லா அமெரிக்காவிற்கு கரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தை கொடுக்கும் போது மாத்திரம் போராடுவதிலிருந்தே - இது சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்கான போராட்டம் என்பதை சிறுபிள்ளையும் புரிந்துக்கொள்ளும்.
அதுமட்டுமல்லாமல், இன்று அதாவுல்லா கைகோர்த்துள்ள வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கமன்வில போன்ற அனைவரும் சீன Sponsorயில் இயங்குபவர்கள் என்பதும் அமெரிக்க ஆதரவு பசில் ராஜபக்ஷ போன்றோருக்கு எதிரானவர்கள் என்பதும் அப்பட்டமாக அனைவரும் அறிந்த உண்மை.
மேலும், வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கமன்வில போன்றோர் செய்யும் குழப்பங்களுக்கு - அவர்களின் அமைச்சு பதவிகளை பறித்து பாடம் கற்பிக்க முடியாமல் பஷில் ராஜபக்ஷ போன்றோருக்கு தடையாக இருப்பதும் சீனாதான். எனவே, அன்று ரணிலின் ஆட்சியில் (2001 - 2004) அதாவுல்லா செய்த கிளர்ச்சியும் இன்று அதாவுல்லா செய்யும் கிளர்ச்சியும் ஒன்றுதான்.
அதாவது, அன்று இந்திய ஏஜென்டாக கிளர்ச்சி செய்தார். இன்று சீன ஏஜென்டாக கிளர்ச்சி செய்கிறார். தவிர, இதில் முஸ்லிம் சமூகத்திற்கு #எந்த #பிரயோஜனமும் இல்லை. அவரைப் பொறுத்தவரை ஒன்றில் பதவி வேண்டும் அல்லது பணம் வேண்டும்.
அதில் அவர் எப்போதும் கவனமாக இருப்பார். இப்போது பதவி இல்லை. அதனால் ஏஜென்ட்டாகி பணம் உழைக்கிறார். அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்காகவும் மாத்திரமேயான அவரது #பாஷிச #அரசியலில் - அவர் உழைப்பதை யாரும் குறைகாணத் தேவையில்லை. ஏன்எனில் அவர் அவ்வளவுதான் என A.L.Thavam முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.