யாழில் சமூக செயற்பாட்டாளரின் மோசமான மறுபக்கம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சா பற்றைக்குள மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாகவும் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 கோடி ரூபாய்கும் அதிக பெறுமதி
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விஷேட தேடுதலின் போது அறுகுவெளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரிடம் மேற்கொண்ட சோதனையில் கேரள கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாணையில் அறுகுவெளி பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 284 கிலோ 415 கிராம் நிறையுடைய 7 கோடி ரூபாய்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.