மட்டக்களப்பில் இடம் பெற்ற சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மற்றும் அம் மாவட்டத்துக்குள் பிரவேசிக்கும் பேருந்துகளை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட போக்குவரத்து பொலிஸார் நேற்றிரவு சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் உள்ள பிள்ளையாரடி பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது நேற்றிரவு 8 மணி முதல் 11 மணிவரை முன்னெடுக்கப்பட்ட வழித்தட அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்போது போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகளை செலுத்திய சாரதிகள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.