துரத்தும் தமிழரின் பாவ கணக்குகள்; நடப்பதற்கு கூட திராணி அற்ற மஹிந்த; கைதுக்கு அஞ்சி ஓடி ஒழியும் கோட்டாபய !
உள்நாட்டு போரில் தமிழரை கொன்றுவிட்டு வெற்றிகளிப்பில் கூத்தாடிய ராஜபக்ச குடும்த்தை தமிழரின் பாவ கணக்குகள் துரத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் கோட்டாபய ராஜபக்ச கைது க்கு அஞ்சி ஓடி ஒளிந்து வரும் நிலை உருவகியுள்ளது.
30 ஆண்டுகால யுத்தத்தை முடித்துவிட்டோம் என அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வீர வசனம் பேசி தென்னிங்கை மக்கள் மத்தியில் அரசர்களாக தம்மை உருவகப்படுத்தியவர்கள் இன்று அந்த மக்களாலேயே ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை
மஹிந்த ராஜபக்க்ஷ நடப்பதற்கு கூட திராணி அற்றவராக, அண்மையில் இடம்பெற்ற மரண் நிகழ்வொன்றில் கைகள் நடுங்க கலந்துகொண்டிருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
ஆட்சியை தக்க வைப்பதற்காக ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பின்னனியில் ராஜபக்சகளே இருந்தமை அம்பலமாகியுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜபக்சாக்கள் பெரும் கிலியில் உள்ளனர்.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.