யாழில் அர்ச்சுனா எம்பிக்கு செருப்பு மாலை அணிவித்த மக்கள்! அவரே வந்து எடுத்து சென்றதால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்கு இடப்பட்டிருந்த காலணி மாலையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தானே வந்து அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அருச்சுனா இராமநாதன் , பதாகையை கிழித்தெடுத்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.

சபை நாகரீகமின்றி தகாத வார்த்தை பிரயோகங்கள்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் , நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
துரத்தும் தமிழரின் பாவ கணக்குகள்; நடப்பதற்கு கூட திராணி அற்ற மஹிந்த; கைதுக்கு அஞ்சி ஓடி ஒழியும் கோட்டாபய !

இந்த நிலையில் , அருச்சுனாவின் அநாகரிக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.