பெயரை மாற்றும் இலங்கை அரசாங்கம்!
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” என்பதை நீக்கி “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
“தாமரை” கோபுரத்திற்கு பொருத்தமான பெயர் இல்லை என்ற கருத்துக்களுக்கு மத்தியில் “தாமரை” என்ற பெயரைக் கைவிடும் திட்டம் வந்துள்ளது.
ராஜபக்ஷ கோபுரம்
பெயரை மாற்றினால், கோபுரத்தை ஓரளவாவது ராஜபக்ஷவிடம் இருந்து விடுவிப்பதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் நம்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்னுமொரு ராஜபக்ச வெள்ளை யானை என தொடர்ந்து வர்ணிக்கப்படுகிறது .இது ஏற்கனவே “ராஜபக்ஷ கோபுரம்” என்றும் அழைக்கப்படுகிறது,
மேலும் இது முன்னாள் அரசாங்கத்தின் கெளரவமான திட்டமாக விமர்சிக்கப்படும் அதே நேரத்தில் நாட்டிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தீய திட்டம் எனவும் விமர்சிக்கபப்ட்டுள்ளது.