காதலுக்காக செய்த காரியம் விபரீதம் ; குப்பைத் தொட்டிக்குள் கசிந்த கள்ள காதல் ரகசியம்
காலி மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுக்கு வீட்டில் இருந்து உணவுப் பொருட்களை இரகசியமாக அனுப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, வேலை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிசிடிவி காட்சிகள்
திருமணமான குறித்த பெண், நகரிலுள்ள வீடு ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், திருமணமான மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தான் பணிபுரிந்த வீட்டில் கிடைத்த தயிர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட உணவுப் பொருட்களை சிறு பொட்டலங்களாக கட்டி, வீட்டின் வெளியே அமைந்திருந்த குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அவரது காதலன் அங்கு வந்து அந்தப் பொட்டலங்களை எடுத்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள் அடிக்கடி காணாமல் போனதை அடுத்து, வீட்டின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண், பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, நம்பிக்கைக்கு துரோகம் செய்ததாகக் கூறி, வீட்டின் உரிமையாளர் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.